ஆள் சேர்க்கும் எல்&டி... துரத்திவிடும் சிடிஎஸ்...!

சிடிஎஸ் நிறுவனம் நிறுவன செலவுகளை குறைக்கும் வகையில், 8 முதல் 12 வருடம் அனுபவமுள்ள மத்திய தர பணியாளர்களை வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
 | 

ஆள் சேர்க்கும் எல்&டி... துரத்திவிடும் சிடிஎஸ்...!

எல்&டி நிறுவனம் 2019ஆம் நிதியாண்டின் தேவையை முன்னிட்டு 3800 கணிணி தொடர்பான பட்டப் படிப்பு முடித்திட்ட புதிய பட்டதாரிகளை வேலையில் அமர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் டிசிஎஸ், விப்ரோ, இன்போஃசிஸ்  ஆகிய நிறுவனங்கள் மொத்தம் 50000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளன.

இது ஒருபுறமிருக்க சிடிஎஸ் நிறுவனம் நிறுவன செலவுகளை குறைக்கும் வகையில், 8 முதல் 12 வருடம் அனுபவமுள்ள மத்திய தர பணியாளர்களை வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

https://www.newstm.in/news/business/news/62146-artificial-intelligence-may-lose-30-of-job-opportunity.html

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிடிஎஸ் நிறுனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ப்ரைன் ஹஃப்ஹரிஸ், இத்தகைய முடிவானது, நிறுவனத்தின் செலவினை குறைத்து  வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்றும், க்ளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, ஆடோமோஷன் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் சேவை  பிரிவுகளில் உள்ள மத்திய தர பணியாளர்களுக்கு வரும் காலங்களில் வேலை பறிபோக அதிக அளவில் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP