250 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் : மத்திய அரசு முடிவு!

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டர்கள் விரைவில் அறிமுகப்படுத்தபடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
 | 

250 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் : மத்திய அரசு முடிவு!

உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டர்கள் விரைவில் அறிமுகபடுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

பாஜகவின் கனவு திட்டங்களில் ஒன்றான அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர் என்ற உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் இதுவரை 80 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இந்நிலையில் இதை நூறு சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி 3 மாதங்களுக்குள் சிறிய எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. எரிவாயு மானிய சிலிண்டர்களின் விலை ரூபாய் 700 என்றிருப்பதால் சில குடும்பங்களால் அதனை வாங்க முடிவதில்லை.

அதனால் 250 ரூபாய் விலையில் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 100 சதவீத குடும்பங்கள் இதன் மூலம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP