தங்கம் விற்பனை அமோகம்... அட்சய திருதியை நாளில் 25% அதிகரிப்பு

அட்சய திருதியை நாளான நேற்று தங்கம் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

தங்கம் விற்பனை அமோகம்... அட்சய திருதியை நாளில் 25% அதிகரிப்பு

தங்கம் விற்பனை அமோகம்... அட்சய திருதியை நாளில் 25% அதிகரிப்பு

அட்சய திருதியை நாளான நேற்று தங்கம் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு(சிஏஐடி) தகவல் தெரிவித்துள்ளது. 

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக இந்தியா முழுவதும் காணப்படுகிறது. நேற்று(ஏப்ரல்.18)  அட்சய திருதியை நாள் என்பதால் தங்கம் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் நேற்று வழக்கத்தை விட தங்கத்தின் விற்பனை 25% அதிகரித்துள்ளது. 

இந்தியாவின் ஜுவல்லர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் அரோரா கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஒருபக்கம் ஏறினாலும் எப்போதும், உலகம் முழுவதுமே அதற்கு மதிப்பு இருப்பதால் மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். முக்கியாக இந்துக்கள் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதை சிறப்பாக கருதுகின்றனர்" என்றார். 

இதுகுறித்து புதுடெல்லி சிஏஐடி அமைப்பின் செயலர் பிரவீன் கண்டேல்வால், "அட்சய திருதியை நாளில் நாடு முழுவதுமே பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் ஏராளமானோர் தங்க நகைகளை வாங்கியுள்ளனர்.  

நேற்று வழக்கத்தை விட தங்கம் விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த 2008-2018ம் ஆண்டு காலகட்டத்தில் தங்கத்தின்  விலை 166 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்கத்தின் மீதான முதலீடு சரியானது, பாதுகாப்பானது என மக்கள் நம்புகின்றனர். ஆபரணங்களை விட தங்க காயின்களை அதிகமாக வாங்குகின்றனர். தங்கத்திற்கான காப்பீட்டு தொடர்பாக அரசு திட்டங்களை கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும். " என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP