ரெப்போ வட்டி விகிதம்  0.25% குறைப்பு 

வங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 | 

ரெப்போ வட்டி விகிதம்  0.25% குறைப்பு 

வங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று நிதிக்கொள்கை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை 5.40% லிருந்து 5.15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம்  0.25% குறைப்பு 

ஏற்கனவே நான்கு முறை 1.10% ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில், தொடர்ந்து 5ஆவது முறையாக ரெப்போ கடன் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும், 2019-20இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9%-க்கும் பதில் 6.1%ஆக குறையும் என்றும், 2020-21-இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP