ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு: அமெரிக்காவின் மிரட்டலால் எதிரொலி

சர்வதேச சந்தையின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 68.87 ஆக இருந்தது. பின் அது 69.10 ரூபாயை தொட்டது. ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் எதிரொலியாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
 | 

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு: அமெரிக்காவின் மிரட்டலால் எதிரொலி

சர்வதேச சந்தையின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு  68.87 ஆக இருந்தது. பின் அது 69.10 ரூபாயை தொட்டது. ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் எதிரொலியாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி 68.86 ரூபாயாக சரிந்ததே, வரலாற்றில் மிகப் பெரிய ரூபாய் மதிப்பின் சரிவாக இருந்தது. ஆனால் இப்போது அதைக் காட்டிலும் மிகப் பெரும் சரிவை சந்தித்துள்ளது. 

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியைக் காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளது, சீனா - அமெரிக்கா உடனான வர்த்தக போரின் தாக்கமாக முதலீட்டில் சரிவு, மத்திய அரசின் கொள்கைகளின் தாக்கம், பணவீக்கம் அதிகரிப்பு, வளர்ச்சி விகிதம் ஆகியவை ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கான தேவையை அதிகரித்துள்ளது போன்ற காரணங்களாலும் ரூபாய் மதிப்பு சரிய இதுவும் காரணமாக கூறப்படுகிறது. ஈரானுடன் அணுஆயுத ஒப்பந்த முறிவை செய்து கொண்டதைத தொடர்ந்து, ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் தந்தது. இதன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மறுபுறம், ரூபாய் மதிப்பு சரிவு என இந்திய பொருளாதாரத்தில் இரண்டும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். வரும் நாட்களில் மேலும் ரூபாயின் மதிப்பு சரிந்தால் அது பொருளாதாரத்தில் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தவள்ளதாக இருக்கும்.  நேரடியாக இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிப்படைவர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP