வரலாறு காணாத உச்சம் தொட்டது பங்குச் சந்தை!

மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து, புதிய உச்சம் தொட்டுள்ளது.
 | 

வரலாறு காணாத உச்சம் தொட்டது பங்குச் சந்தை!

மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து, புதிய உச்சம் தொட்டுள்ளது. 

நாட்டின் முக்கிய பங்கு சந்தைகளான, மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், வர்த்தம் நடைபெற்று வருகிறது. இன்நிலையில், பி.எஸ்.இ., எனப்படும் மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் செக்செக்ஸ், 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. 
பங்கு சந்தை வரலாற்றில், முதல் முறையாக, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தம் நடைெபற்றதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதே போல், தேசிய பங்குச் சந்தையிலும், ஏற்றம் காணப்படுகிறது. 

ஆர்.பி.ஐ., அறிவிப்பில் முக்கிய அம்சங்கள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சின் காரணமாகவும், ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளிலும் நிறுவன பங்குகளின் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP