ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை!

மும்பை பங்குச் சந்தையில் 157 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 49 புள்ளிகளும் ஏற்றத்துடன் வியாழக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது. இரு சந்தைகளிலும் காலை முறையே 400 புள்ளிகள், 95 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியது.
 | 

ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை!

மும்பை பங்குச் சந்தையில் 157 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 49 புள்ளிகளும் ஏற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை காலை முறையே 400 புள்ளிகள், 95 புள்ளிகள் ஏற்றத்துடனே வர்த்தகம் தொடங்கியது.

மாலை வர்த்தகத்தின் முடிவில், புதன்கிழமையை ஒப்பிடும்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்ந்து, 35,807 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49 புள்ளிகள் அதிகரித்து 10,779 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது. 

தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் வழக்கம்போல் அதிகமாக விற்பனையாகின.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP