1. Home
  2. வர்த்தகம்

தொடரும் பங்குச்சந்தை சரிவு... பட்ஜெட் காரணமா?

தொடரும் பங்குச்சந்தை சரிவு... பட்ஜெட் காரணமா?


மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ததன் எதிரொலிப்பாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 263.79 புள்ளிகள் குறைந்து 34,802.99 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 34,858.21 என்ற புள்ளிகள் அளவில் காணப்பட்டது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 94.05 புள்ளிகள் குறைந்து 10,666.55 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,699.80 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், கோல் இந்தியா, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை அதிகரித்தன. இண்டஸ்இண்ட் பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், எல்& டி என பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று குறைந்தன.

newstm.in

Trending News

Latest News

You May Like