சென்னை மக்களே.....பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
 | 

சென்னை மக்களே.....பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.

வெளிமாநிலங்களில் பெய்த கனமழையால், பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்து, தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து, வெங்காயத்தின் விலையை குறைப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், காமதேனு கூட்டுறவு அங்காடியில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33 விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ராவிலிருந்து வெங்காயம் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, கோயம்பேட்டில் பெரிய வெங்காயம் முதல் ரகம் ரூ.45-க்கும், இரண்டாம் ரகம் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP