கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்; சென்செக்ஸ் 343 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை இன்று காலை 33,778.60 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ், இறுதியில் 343.87 புள்ளிகள் குறைந்து 33, 690.09 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 100 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
 | 

கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்; சென்செக்ஸ் 343 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 343 புள்ளிகள் இன்று சரிவடைந்துள்ளது. இன்று காலை 33,778.60 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய சென்செக்ஸ், இறுதியில் 343.87 புள்ளிகள் குறைந்து 33, 690.09 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. பிற்பகலில் அதிகபட்ச புள்ளிகளாக 33,838.76 என்ற அளவை எட்டியது.

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று 100 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. 10,135.05 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கிய நிஃப்டி  10,124.90ல் வர்த்தகமானது. 

இன்றைய வர்த்தக நிலவரப்படி, விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், ஓஎன்ஜிசி, பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், எஸ் பேங்க் உள்ளிட்ட பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து விற்பனையானதாகத்தெரிய வந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP