தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 300 புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று 429 புள்ளிகள் குறைந்துள்ளன.
 | 

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தைகள்!

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 300 புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று 429 புள்ளிகள் குறைந்துள்ளன. இறுதியில் 33,317.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 109.60 புள்ளிகள் குறைந்து 10,249.25 என்ற புள்ளிகளில் முடிந்தது.

மேலும் டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் பேங்க், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, எஸ் பேங்க், டாக்டர் ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், பவர்கிரிட், சன் பார்மா, விப்ரோ, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP