தாெடர்ந்து ஏறுமுகம் காட்டும் பங்குச் சந்தை

இந்திய பங்கு சந்தைகளில் கடந்த சில நாட்களாக ஏறுமுகம் காணப்படுகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை இரண்டிலுமே, ஒரு வாரமாக ஏற்றம் காணப்படுகிறது.
 | 

தாெடர்ந்து ஏறுமுகம் காட்டும் பங்குச் சந்தை

இந்திய பங்கு சந்தைகளில் கடந்த சில நாட்களாக ஏறுமுகம் காணப்படுகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை இரண்டிலுமே, ஒரு வாரமாக ஏற்றம் காணப்படுகிறது. 

இம்மாதம், 1ம் தேதி பார்லிமென்ட்டில் மத்திய பட்ஜெட் தாக்கலானது. அன்றிலிருந்து, இன்று வரை, சந்தையின் போக்கு, ஏறுமுகமாகவே உள்ளது. தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், 11 ஆயிரத்தை கடந்தது. இது மேலும் உயர்ந்து, இன்று, 11,092  புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

அதே போல், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 37 ஆயிரத்தை கடந்து, இன்றைய நிலவரப்படி, 37,102 என்ற புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. கிட்டத்தட்ட, பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளது. 

சந்தையின் போக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதால், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்துள்ளதாக, நிதியியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP