பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு; 570 புள்ளிகள் குறைந்தது!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 572.28 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. இன்று காலை 35,694.25 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் 35,312.13 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.
 | 

அதேபோன்று தேசிய பங்குச் சந்தை  குறியீட்டு எண் நிஃப்டி 181.75 புள்ளிகள் குறைந்துள்ளது.  10,718.15 என்ற புள்ளிகளில் தொடங்கி  10,601.15  என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 

சன் பார்மா மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை மட்டுமே இன்று அதிகரித்துள்ளது. ஜப்பானின் கரன்சியான யென் மதிப்பிற்கு நிகரான டாலரின் மதிப்பு இன்று குறைந்ததாலும், கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தினாலும் இன்று பங்குச்சந்தை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், கச்சா எண்ணையின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP