சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 115 புள்ளிகள் குறைவு

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,644.05 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது.
 | 

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 115 புள்ளிகள் குறைவு

நேற்றைக்கு ஏற்றம் கண்ட பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,644.05 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஏற்றமும், இறக்கமுமாக சென்ற சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில், 114.94 புள்ளிகள் சரிந்து 35,432.39 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை அளவீடான நிஃப்டி 10,808.45  புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 30.95 புள்ளிகள் சரிந்து  10,741.10ல் வர்த்தகமானது. அதிகபட்ச புள்ளிகளாக தொடக்கத்தில் 10,809.60 என காணப்பட்டது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் விலை சிறிது அதிகரித்தது. அதே நேரத்தில் சன் பார்மா, எம் &எம், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, மாருதி, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP