1. Home
  2. வர்த்தகம்

பங்குசந்தை: டாக்டர் ரெட்டி பங்குகளின் விலை அதிகரிப்பு

பங்குசந்தை: டாக்டர் ரெட்டி பங்குகளின் விலை அதிகரிப்பு

இன்றைய பங்குசந்தையில் டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் பங்குகள் 3.92 சதவீதம் அதிகரித்து ரூ.2276.20க்கு வர்த்தகமாகி வருகிறது.

13-06-2018, இன்றும் பங்குசந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 35,835.44ஆக தொடங்கி பகல் 12.35 மணியளவில் 128.33 புள்ளிகள் அதிகரித்து 35820.77ஆக வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக 35,877.41 வரை எட்டியது. தேசிய பங்குசந்தையான நிஃப்டி 34.80 புள்ளிகள் அதிகரித்து 10,877.65 ஆக வர்த்தகமாகி வருகிறது.

டாக்டர் ரெட்டி, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், சன் பார்மா மற்றம் ஸ்டேட் வங்கியின் பங்குகளின் விலை அதிகரித்தது. குறிப்பாக டாக்கர் ரெட்டி நிறுவனத்தின் பங்குகள் 4 தசவீதம் வரை உயர்ந்து ரூ. 2276.20க்கு வர்த்தகமாகி வருகிறது. டாடா ஸ்டீல், எச்யூஎல், ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் நஷ்டத்தை கண்டன.

தங்கம் விலை: சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 24808.00 ஆகவும், ஒரு கிராம் ரூ. 3101.00ஆகவும் உள்ளது. 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ரூ.23624.00ஆகவும், ஒரு கிராம் ரூ.2953.00ஆகவும் விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.71.62, பெட்ரோல் ரூ.79.33 என விற்பனையாகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like