ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரிப்பு..

ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரிப்பு..
 | 

ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரிப்பு..

பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. சென்செக்ஸ் இன்று 90.40 புள்ளிகள் அதிகரித்து 34,443.19 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 34,478.36 என்ற அளவில் முடிவுற்றது. 

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 13.40 புள்ளிகள் உயர்ந்து 10,637.00 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,645.10 என இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, எஸ் பேங்க், விப்ரோ, ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஹீரோ மோட்டோகார்ப், பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், சன் பார்மா  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP