பங்குச்சந்தை சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்வு!

இன்றும் பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சாதனையை தக்க வைத்துள்ளன. பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 178.47 புள்ளிகள் அதிகரித்து 35,260.29 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக தொடக்கத்தில் 35,506.32 என்ற அதிகபட்ச புள்ளிகளாக காணப்பட்டது.
 | 

பங்குச்சந்தை சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்வு!


நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 35,000 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 10,800 புள்ளிகளை கடந்தும் புதிய சாதனை படைத்தன. இன்றும் பங்குச்சந்தைகள் அந்த சாதனையை தக்க வைத்துள்ளன.

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 178.47 புள்ளிகள் அதிகரித்து 35,260.29 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக தொடக்கத்தில் 35,506.32 என்ற அதிகபட்ச புள்ளிகளாக காணப்பட்டது. 

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 28.45 புள்ளிகள் உயர்ந்து 10,817.00 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,883.40 என இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஐடிசி, எச்டிஎப்சி பேங்க், எம்& எம், கோட்டக் மஹிந்திரா பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், சன் பார்மா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP