1. Home
  2. வர்த்தகம்

பங்குசந்தை: சென்செக்‌ஸ் 108.68 புள்ளி வீழ்ச்சி

பங்குசந்தை: சென்செக்‌ஸ் 108.68 புள்ளி வீழ்ச்சி

ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் நிதி கொள்கை அறிக்கை காரணமாக இன்றும் பங்குசந்தை வீழ்ச்சியை சந்தித்தது. இன்று, ஜூன் 5ம் தேதி, காலை 35,029.45 ஆக தொடங்கிய மும்பை பங்குசந்தை 108.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 34,903.21ஆக முடிந்தது. தேசிய பங்குசந்தையை பொறுத்த வரை 10,630.70ஆக தொடங்கி 35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10,593.15ஆக முடிந்தது.

லக்ஷ்விலாஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.5. 20 புள்ளி அதிகரித்து 111.2 ஆக உள்ளது. எச்டிஐஎல், ஐடியா உள்ளிட்ட பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன.

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 30 அதிகரித்து ரூ. 29,370 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50 அதிகரித்து ரூ. 31,450 ஆகவும் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 67ஆக உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like