பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் இன்று பெட்ரோல்,டீசல் விலை முறையே 40 காசுகள், 31 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மூன்று நாள்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
 | 

பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 40 காசுகள், 31 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மூன்று நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07-க்கும், டீசல் ரூ.65.70-க்கும் விற்கப்பட்டு வந்தது. 

இந்த  நிலையில், இன்று பெட்ரோல் விலையில் 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 71.47-க்கும் ,டீசல்  31 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ. 66.01-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரிப்பொருள்களின் விலை பெரும்பாலான நாட்களின் இறங்குமுகமாக இருந்து வந்த நிலையில், இன்றைய விலையேற்றம் வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.
 newstm.in


 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP