நேற்றைய விலைக்கே விற்கப்படும் பெட்ரோல்!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், செவ்வாய்க்கிழமை விலை நிலவரப்படியே அவை விற்பனை செய்யப்படுகின்றன.செவ்வாய்க்கிழமை பெட்ரோல் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.71.22 -க்கு விற்கப்பட்டது.
 | 

நேற்றைய விலைக்கே விற்கப்படும் பெட்ரோல்!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், செவ்வாய்க்கிழமை விலை நிலவரப்படியே அவை விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.42-க்கும், டீசல் ரூ.66.36-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை பெட்ரோல் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.71.22 -க்கும், டீசல் 22 பைசா குறைந்து ரூ.66.14-க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து 10 நாள்களுக்கு மேலாக எரிபொருள்களின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று இவற்றின் விலை மேலும் குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல், செவ்வாய்க்கிழமை விலைக்கே இன்று விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP