பெட்ரோல், டீசல் இன்று விலையேற்றம்!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் முறையே 22 காசுகள், 8 காசுகள் விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.85 -க்கும் ,டீசல் ரூ.65.62 -க்கும் விற்கப்பட்டது.
 | 

பெட்ரோல், டீசல் இன்று விலையேற்றம்!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் முறையே 22 காசுகள், 8 காசுகள் விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.85 -க்கும் ,டீசல் ரூ.65.62 -க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலையில்  22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 71.07 -க்கும், டீசல் 8 காசுகள் அதிகரித்து ரூ.65.70-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

மிகப்பெரிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை பொருந்தும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருவதன் பயனாக,எரிபொருள்களின் விலை கடந்த 3 நாள்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் அவற்றின் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP