1. Home
  2. வர்த்தகம்

பெட்ரோல், டீசல் விலை: நுகர்வோர் ஏமாற்றம்!

பெட்ரோல், டீசல் விலை: நுகர்வோர் ஏமாற்றம்!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. இதனால் நுகர்வோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07 -க்கும், ரூ.65.70-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவற்றின் விலையில் ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல், நேற்றைய விலைக்கே அவை விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் பெரியதான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெட்ரோல்,டீசலில் விலை நேற்று சற்று உயர்ந்ததும், இன்று அவற்றின் விலை குறைக்கப்படாததும் நுகர்வோர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like