பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளை எட்டிய நிஃப்டி!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 36,635.14 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 6.78 புள்ளிகள் குறைந்து 36,541.63 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.
 | 

பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளை எட்டிய நிஃப்டி!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. வரலாறு காணாத அளவில் சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோன்று நிஃப்டியும் 11,000 புள்ளிகளை கடந்துள்ளது. 

வாரத்தின் கடைசி நாளான இன்று, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 36,635.14 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 6.78 புள்ளிகள் குறைந்து 36,541.63 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தக நேர முடிவில், 36,740.07 என்ற அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 11,056.90 புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 4 புள்ளிகள் குறைந்த நிலையில் 11,018.90ல் வர்த்தகமானது. 

மேலும், இன்றைய வர்த்தக நிலவரப்படி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ இன், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP