டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.69.05 என இறங்கி வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.
 | 

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.69.05 என இறங்கி வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் தொடர்ந்து டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டு வந்த நிலையில், கடந்த மே மதத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு இறங்கியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், வருங்கால எதிர்பார்ப்பு அதிகரித்ததாலும், வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், டாலரின் மதிப்பு அதிகரித்தது. 

மற்ற நாடுகளுடன் ட்ரம்ப் தொடர்ந்து நடத்தி வரும் வர்த்தகப் போர்களினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அமெரிக்க பொருளாதாரம் வலுவடையும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் தலைவர் பவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து, ஆசிய நாடுகளின் நாணயங்களை விட டாலரின் மதிப்பு அதிகரித்தது.

இந்தியாவில் அந்நிய செலாவணி சறுக்கல், நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களால், சந்தைகள் சாற்றி சரிவை கண்டதும் இதற்கு காரணமாக அமைந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP