கடும் பனிப் பொழிவால் தக்காளி விலை விர்....

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் நிலவும் கடும் பனிப் பொழிவால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 | 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் பனிப் பொழிவு காணப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில், சமீபத்தில் வீசிய கஜா புயலால், அந்த பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தக்காளி சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில், புயல் மற்றும் பனியின் காரணமாக, தற்போது, விளைச்சல் மிகவும் சரிந்துள்ளது.

இதன் காரணமாக, அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் சில நாட்களாக, தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

 அந்த மாநிலங்களிலும் தற்போது பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால், தக்காளி வரத்து குறைந்து, விலையும் அதிகரித்துள்ளது. 

மொத்த விற்பனையில், ஒரு கிலோ நவீன் தக்காளி 60 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது, பாெதுமக்கள் மட்டுமின்றி, ஓட்டல் நடத்துவோருக்கும் கவலை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP