1. Home
  2. வர்த்தகம்

ரூ.25 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

ரூ.25 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, சனிக்கிழமை ரூ.24,728-க்கு விற்பனையானது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,093-க்கும், ஒரு சவரன் ரூ.24,744-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் வார விடுமுறை நாளான சனிக்கிழமை, தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.3,091-க்கும் , ஒரு சவரன் ரூ.24,728-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்தாலும், தற்போதைய அதன் விலை நிலவரம், விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை நெருங்கும் என்பதையே உணர்த்துகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like