1. Home
  2. வர்த்தகம்

பஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு

பஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 71.07 புள்ளிகள் குறைந்து 33,703.59 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக பிற்பகல் நேரத்தில் 33,960.95 என்ற புள்ளிகளை தொட்டது.

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 18.00 புள்ளிகள் குறைந்து 10,360.40 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,429.35 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.

இன்றைய வர்த்தகத்தின்போது, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, பாரதி ஏர்டெல், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. டாடா குளோபல், பார்மா மற்றும் வங்கிகளின் பங்குகள் விலை குறைந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி காரணமாக ஒட்டுமொத்த வங்கிகளின் பங்குகள் விலை குறைந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like