1. Home
  2. வர்த்தகம்

கோடக் மியூட்சுவல் பண்ட்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு புதிய சிக்கல்

கோடக் மியூட்சுவல் பண்ட்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு புதிய சிக்கல்

கோடக் மியூட்சுவல் பண்ட்ஸ் திட்டத்தின் மூலமாக 6 வித திட்டங்களில் நிரந்தர வைப்புத் தொகை செலுத்திய முதலீட்டாளர்களுக்கு அப்பணம் முழுவதுமாக திரும்பக் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

முதலீட்டாளர்களின் பணத்தை ஜீ குழுமத்தின் மற்றொரு அங்கமான எஸ்ஸெல் குழும நிறுவனங்களுக்கு கோடக் கடனாக வழங்கியிருந்தது. எஸ்ஸெல் நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் கடனை திருப்பிச் செலுத்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோடக் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் செலுத்திய நிரந்திர வைப்புத் தொகைகளுக்கான முதிர்வு காலம் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி, மே இறுதி வரையிலான காலகட்டத்தில் வருகிறது.

இந்தக் காலவரம்பில் முதிர்வு அடையும் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெற முடியாத சூழல் நிலவுகிறது. எனினும், எஸ்ஸெல் நிறுவனத்துக்கு கொடுத்துள்ள பணத்தை கழித்து போக மீதமுள்ள தொகை தற்போதைக்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும், அந்த நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, நிலுவையில் இருக்கும் தொகையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் கோடக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like