1. Home
  2. வர்த்தகம்

19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி!

19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 36,509.08 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 22.21 புள்ளிகள் குறைந்து 36,351.23 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் தொடக்கத்தில், அதிகபட்ச புள்ளிகளாக 36,515.58யை எட்டியது.

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி கடந்த வாரங்களில் 11,000 புள்ளிகளை தாண்டியது. கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்ததனால், 11,000ல் இருந்து சரிந்துள்ளது. இன்று 23 புள்ளிகள் குறைந்த நிலையில் 10,957.10ல் வர்த்தகமானது.

மேலும், இன்றைய வர்த்தக நிலவரப்படி, வேதாந்தா, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், எஸ் பேங்க், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிது அதிகரித்து காணப்பட்டன.

அதே நேரத்தில், கோடக் மஹிந்திரா பேங்க், எச்டிஎப்சி, டிசிஎஸ், எல்&டி, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like