1. Home
  2. வர்த்தகம்

வங்கிச்சேவையில் களமிறங்கும் எல்ஐசி!

வங்கிச்சேவையில் களமிறங்கும் எல்ஐசி!

காப்பீட்டுத்துறைக்கு பெயர்போன எல்ஐசி நிறுவனம் வங்கிச் சேவையில் களமிறங்கவுள்ளது.

எல்ஐசி நிறுவனம் சுமார் 70% சந்தை பங்கை எல்ஐசி தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறது. இந்நிலையில் காப்பீடைத் தொடர்ந்து வங்கிச் சேவையிலும் களமிறங்க உள்ளது. சுமார் 5, 600 கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளாடி வரும் பொதுத்துறை வங்கியான IDBI வங்கியின் 51% பங்குகளை எல்ஐசி வாங்கலாம் என காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDA ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து எல்ஐசி நிறுவனம் நேரடியாக வங்கிச் சேவையில் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. IDBI வங்கியின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் எல்ஐசி நிறுவனம் ரூ.10,000 கோடி முதல் ரூ. 13000 கோடி வரை செலவிட வேண்டியிருக்கும். கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் பணத்தை கொண்டு ஒரு வங்கியை நஷ்டத்திலிருந்து மீட்பது சரியான முடிவாக இருக்குமா? வங்கித்துறை அனுபவமே இல்லாத எல்ஐசி, ஐடிபிஐ வங்கியை எப்படி நிர்வகிக்கும் என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுகிறது? ஏற்கனவே நஷ்டமான வங்கியை தத்தெடுக்கும் எல்ஐசி வெற்றிநடைப்போடுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

newstm.in

Trending News

Latest News

You May Like