1. Home
  2. வர்த்தகம்

ரூ.250ல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம்!


பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதியில் குறைந்தபட்ச ஆண்டு டெபாசிட் குறைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்காக, சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தபால் நிலையங்களில் 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. ஓராண்டில் குறைந்தது ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்னும் ஏராளமான குடும்பங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 250 ரூபாய் செலுத்தி சுகன்யா சம்ரிதி கணக்கு தொடங்கலாம் என்றும் அதன்பிறகு ஓராண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்த திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது. 8.1 % வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் கடந்த நவம்பர் வரை 1.26 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் சுமார் ரூ.19,183 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like