பெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000

திருச்சி, பெல் நிறுவனத்தில் வெல்டர், பிட்டர், மெக்கானிக், உள்ளிட்ட 71 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 டிசம்பர் 2018
 | 

பெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000

திருச்சி, பெல் நிறுவனத்தில் வெல்டர், பிட்டர், மெக்கானிக், உள்ளிட்ட 71 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

மாத சம்பளம் ரூ.34,300. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 60% மதிப்பெண்களுடன் என்டிசி மற்றும் என்ஏசி சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். 01.11.2018 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. 

எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.200-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 டிசம்பர் 2018 

எழுத்துத்தேர்வு 20.01.2019 அன்று திருச்சியில் நடைபெறும்.  மேலும் விவரங்கள் அறிய https://www.bheltry.co.in/careers/main_advt.jsp அல்லது https://www.bheltry.co.in/careers/docs/advt.pdf என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP