ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை...!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
 | 

ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை...!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.  இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 3. 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.  ரூ.150 தேர்வுக் கட்டணம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 03, 2018. விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : டிசம்பர் 05, 2018.  மொத்த காலிப் பணியிடம் 55. இருபத்து ஐந்து முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500.

மேலும் விவரங்களை http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf (அல்லது) http://www.tnpscexams.in/ என்னும் இணையதளத்துக்குச் சென்று காணலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP