அங்கன்வாடி மையங்களில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள் !

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் கீழ்கண்ட 153 பணிகளுக்கான காலியிடப் பணிகள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் வரும் 11.02.2019க்குள் விண்ணப்பிக்கலாம்.
 | 

•    முதன்மை அங்கன்வாடி மையப் பணியாளர்
•    குறு அங்கன்வாடி மையப் பணியாளர்

மேற்கண்ட பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 25 முதல் 35 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். வுpதவை மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரையும் சலுகை அளிக்கப்படுகிறது. 

•    அங்கன்வாடி உதவி பணியாளர்

மேற்காணும் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 40 வயதிற்குள் இருக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு 5 வருடம் வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தகுதியுடையவர்கள் விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் இருந்தும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 11.02.2019க்குள் விண்ணப்பிக்கலாம். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP