பட்டதாரிகளுக்கு விமான நிலையத்தில் வேலை !

இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்படவுள்ள 372 செக்யூரிட்டி ஸ்கிரீனர்ஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம். மொத்த காலியிடங்கள்: 372
 | 

மதுரை, திருப்பதி, ராய்பூர், உதய்பூர், ராஞ்சி, இந்தூர், மங்களுர், புவனேஸ்வர், அகர்டாலா, போர்ட் பிளேர், சண்டிகர் ஆகிய விமான தளங்களில் வேலைவாய்ப்பு உண்டு. 

ஏதாவது ஒரு  துறையில் பட்டம் பெற்றவர்கள், என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் ஏவி.எஸ்.இ.சி. சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.  

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 கட்டணம். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள் கட்டணம் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 

தகுதி உள்ளவர்கள் தபால் முலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi -110 003 என்ற முகவரிக்கு வரும் 15ஆம் தேதிக்குள் சேரும்படி அனுப்ப வேண்டும். 
மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொள்ள https://aaiclas-ecom.org/images/career3.pdf என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP