பாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க 

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்படவுள்ளன. பொது உறவுகள் அதிகாரி, இயக்குநர், டீன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்
 | 

பாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க 

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உறவுகள் அதிகாரி, இயக்குநர், டீன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 5
பொது உறவுகள் அதிகாரி : 1
இயக்குநர் : 1
டீன் : 1
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 1
பதிவாளர் : 1

கல்வித் தகுதி : பி.எச்டி, எம்.காம், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி

வயது வரம்பு:-

பொது உறவுகள் அதிகாரி : 40 வயதிற்கு உட்பட்டு
இயக்குநர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு
டீன் : 52 முதல் 57 வயதிற்கு உட்பட்டு
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 55 வயதிற்கு உட்பட்டு
பதிவாளர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு

முன்அனுபவம் : குறைந்தபட்சம் 08 முதல் 15 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-    http://www.b-u.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, Bharathiar University, Coimbatore - 641046

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08 -11 -2018

மேலும் விவரங்களுக்கு:  http://www.b-u.ac.in/Home/UniRecruitments என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP