ரயில்வேயில் உதவித் தொகையுடன் பயிற்சி... உடனே விண்ணப்பியுங்கள்...!

தெற்கு ரயில்வேயில் 2018-19ஆம் ஆண்டுக்கான ஆக்ட் தொழில் பழகுநர்களை (Act Apprentices) அமர்த்த தீர்மானித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் செயலாக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
 | 

ரயில்வேயில் உதவித் தொகையுடன் பயிற்சி... உடனே விண்ணப்பியுங்கள்...!

தெற்கு ரயில்வேயில் 2018-19ஆம் ஆண்டுக்கான ஆக்ட் தொழில் பழகுநர்களை (Act Apprentices)  அமர்த்த தீர்மானித்துள்ளது.

அதன்படி பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸில் 924 காலியிடங்களும், பொன்மலை சென்ட்ரல் ஒர்க் ஷாப்பில் 797 இடங்களும், போத்தனூர் சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடத்தில் 2652 காலியிடங்களும் உள்ளன. 

விண்ணப்பதாரர்கள், மெட்ரிகுலேஷன்/ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்களாவும், 15-24 வயது உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.  www.rrcmas.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தொழில்பழகுனர் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி உதவித் தொகை பெற விண்ணப்பதாரர்களுக்கு தகுதி உண்டு. 

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் செயலாக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். (SC/ST/PWD/Women தவிர்த்து). விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2019 அன்று மாலை 5.00 மணி. 

மேற்கண்ட அறிவிப்பை கேரேஜ் அண்ட் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர், சென்னை-12 வெளியிட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP