ரயில்வேயில் 89,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் 89,500 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை இந்திய ரயில்வே அமைச்சகம் துவக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு திட்டம் இதுவென கூறப்படுகிறது.
 | 

ரயில்வேயில் 89,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

ரயில்வேயில் 89,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

89,500 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு  நடவடிக்கையை இந்திய ரயில்வே அமைச்சகம் துவக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு நடவடிக்கை இதுவென கூறப்படுகிறது. 

ரயில்வே துறையில் உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பிரிவினர், வெல்டர்கள், போர்ட்டர்கள் உள்ளிட்ட வேலைகளும் இதில் அடங்கும். 

ரயில்வே போர்டின் உறுப்பினர்களை பாதியாக குறைத்து, அதிகப்படியான பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை கொண்டுவர மத்திய அமைச்சர் திட்டமிட்டு வந்தார். சொன்னபடி வேலைவாய்ப்புகளை உருவாகவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக இந்த திட்டம் அமையும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல் எஞ்சினீயர்கள் வரை, இதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதில் டி பிரிவில், தண்டவாள கட்டுமான பணிகளுக்கான காலி இடங்கள் 63,000 ஆகும். ரயில் எஞ்சின் இயற்றும் ஓட்டுனர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்களுக்கான பணியிடங்கள் 26,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதற்காக சுமார் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP