மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்! 

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
 | 

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்! 

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2018- 2019ஆம் ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு  (Diploma in Medical Lab Technology (DMLT))  (30 இடங்கள்) தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் (அல்லது) வாழ்க்கை தொழில் கல்விப் பிரிவில் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழில்பயிற்சியில்(Vocational Medical Lab Assistant) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பயிற்சிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பெற:- தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர், தொற்றுநோய் மருத்துவமனை, எண் - 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை - 81 என்னும் முகவரியில் உள்ள அலுவலகத்தில் நவம்பர் 17 முதல் 28-ஆம் தேதி வரை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவம்பர் 29-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை மட்டுமே பெறப்படும்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP