பிளஸ் 2 முடித்தோருக்கு சி.ஐ.எஸ்.எப்.,இல் பணி வாய்ப்பு

பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள், சி.ஐ.எப்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவில், ஹெட் கான்ஸ்டபிள் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மத்திய அரசுப் பணியான இதில் சேர, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த, 25 வயதுக்கு மிகாத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வழக்கமான வயது தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தேர்ச்சி பெறுவோர், 25 ஆயிரம் முதல் 81 ஆயிரம் வரை மாத சம்பளம் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம், 21ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விரிவான விபரங்களை, cisf.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP