நீங்கள் என்ஜினீரிங் முடித்தவரா? இந்திய ராணுவத்தில் சேர ஓர் அரிய வாயப்பு!

இந்திய ராணுவத்தில் என்ஜினீரிங் பட்டப்படிப்பு முடித்த திருமணமாகாத ஆண்களுக்கான 'டெக்னிக்கல்' வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 | 

நீங்கள் என்ஜினீரிங் முடித்தவரா? இந்திய ராணுவத்தில் சேர ஓர் அரிய வாயப்பு!

இந்திய ராணுவத்தில் என்ஜினீரிங் பட்டப்படிப்பு முடித்த திருமணமாகாத ஆண்களுக்கான 'டெக்னிக்கல்' வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டேராடூனில் 'இந்தியன் மிலிட்டரி அகாடமி 2020' ஆம் ஆண்டுக்கான படைப்பிரிவில் சேர டெக்னிக்கல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

காலிப்பணியிடங்கள்: 

சிவில் - 10, கட்டிடக்கலை -1, மெக்கானிக்கல் -6, எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் -6, கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் -8, எலெக்ட்ரானிக்ஸ் -1, மெட்டலர்ஜிக்கல் -1, இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் -1, மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ்-1

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்ரல் 10, 2018

விண்ணப்பத்திற்கான கடைசி நாள் : மே 9, 2018

கல்வித்தகுதி: என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். என்ஜினீயரிங் இறுதி வருடம் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 20-27

இதற்கான தேர்வில் வெற்றி பெறுபவர்கள், 49 வாரங்களுக்கு பயிற்சிக்காக டேராடூன் அழைத்துச் செல்லப்படுவர். பயிற்சிக் காலத்தின் போது திருமணம் செய்ய அனுமதிக்கப்படாது. மேலும், பெற்றோர்களை காணவும் அனுமதிக்கப்படாது. பயிற்சி காலம் முடிந்த பின்னரே, திருமணம் செய்துகொள்ளவோ, பெற்றோர்களை பார்க்கவோ அனுமதிக்கப்படும். 

மேலும் விபரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை காணவும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP