அலர்ட்! டிஎன்பிஎஸ்சி குரூப் 1, ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் ரயில்வே ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை(ஜனவரி 31) இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.
 | 

அலர்ட்! டிஎன்பிஎஸ்சி குரூப் 1, ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் ரயில்வே ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மாத இறுதியில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 139 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஜனவரி 3ம் தேதி தொடங்கி, ஜனவரி 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதேபோன்று, ரயில்வேயில் ஜூனியர் என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர்(ஐடி), டிஎம்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான 13,487 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை (ஜனவரி 31) ஆகும். எனவே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை(ஜனவரி 31) இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கவும். 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க-> http://tnpscexams.in/

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க->http://www.rrbchennai.gov.in/

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP