வங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா?

பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 8,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப, போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர்களுக்கான காலியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வை நடத்தும் ஐ.பி.பி.எஸ்., இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 | 

வங்கிகளில் காலியாக உள்ள ஆபீசர் ஸ்கேல் 1, ஆபீசர் ஸ்கேல் 2 உள்ளிட்ட பணியிடங்கள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே துவங்கிவிட்டது. 

வங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா?

தேர்வில் பங்கேற்க விரும்புவோர் வரும் ஜூலை 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிலிமினரி, மெயின் என இருவகை தேர்வுகள் நடத்தப்படும். இவை, வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளன. 

குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்த 21 வயது நிரம்பியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். உச்சபட்ச வயது வரம்பு, வயது வரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்டவற்றை அறிய, www.ibps.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கவும் செய்ய வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP