காவல்துறையில் 202 எஸ்.ஐ பணியிடங்கள்; டிகிரி படித்திருந்தாலே போதும்!

தமிழக அரசு சீருடைப் பணியாளர் தேர்வுகுழுமம் (Tamil Nadu Uniformed Service Recruitment Board) 202 எஸ்.ஐ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 | 

காவல்துறையில் 202 எஸ்.ஐ பணியிடங்கள்; டிகிரி படித்திருந்தாலே போதும்!

தமிழக அரசு சீருடைப் பணியாளர் தேர்வுகுழுமம் (Tamil Nadu Uniformed Service Recruitment Board) 202 எஸ்.ஐ காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளன. தமிழக காவல்துறையின் இந்த பணிக்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. 

அறிவிப்பு விபரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர்: எஸ்.ஐ (ஃபிங்கர்ப்ரிண்ட்)

காலிப்பணியிடங்கள்: 202

அறிவிப்பு வெளியான நாள்: ஆகஸ்ட் 29 

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 28

வயது வரம்பு: 20 -28 வயது, மேலும், குறிப்பிட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. 

ஊதியம்: ரூ. 36,900 -1,16,600

விண்ணப்ப கட்டணம்: ரூ.500

தகுதி: அறிவியல் தொடர்பாக ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இதர விபரங்கள்: பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 30% இட ஒதுக்கீடு, மீதியுள்ள 70% ஆண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே காவல்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு தனியாக 20% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 5 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தொடர்ந்து உயரம், கண்பார்வை உள்ளிட்ட  உடற்தகுதி சோதனையிலும் வெற்றி பெற வேண்டும். எழுத்துத்தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் விபரங்களுக்கு அறிவிக்கையை பெற http://www.tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf  கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:  tnusrbonline.org என்ற இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP