10வது பாஸா..? காவல்துறையில் வேலை ! இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !!

10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
 | 

10வது பாஸா..? காவல்துறையில் வேலை ! இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. 

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் மொத்தம் 8826 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழை ஒரு மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும். 

10வது பாஸா..? காவல்துறையில் வேலை ! இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !!

வயது வரம்பு: அனைத்துப் பிரிவினரும் 18 வயதுக்கு மேல் இருத்தல் அவசியம். பொதுப்பிரிவினர் 1.7.2019 அன்று 24 வயதிற்கு மேற்படாதவாறு இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26 வயதிற்குள்ளும், ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினர் 29 வயதிற்குட்பட்டும் இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் 35 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு, மற்றும் உடல் தகுதித் தேர்வுகள் உண்டு. தேர்வுக் கட்டணம் ரூ.130-ஐ இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலம் 08.03.2019 காலை 10 மணி முதல் 08.04.2019 வரை விண்ணப்பத்தை பதிவேற்றலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் http://www.tnusrbonline.org/pdfs/CR19_Notification.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP