10ஆம் வகுப்பு தேர்ச்சியா? தற்காலிக ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பியுங்கள் !

சென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள தற்காலிக ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இந்தப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 | 

விண்ணப்பதாரர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.12,000.  நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளை கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  நேர்முகத் தேர்வு வரும் 26.02.2019 அன்று சென்னை-51, மாதவரம் பால்பண்ணையில் அமைந்துள்ள TANUVAS-ல் நடைபெறவுள்ளது. 

இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் பயோ-டாடாவுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களை நேர்முகத் தேர்வு அன்று சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய www.tanvas.ac.in என்ற இணையத்தில் அறிந்து கொள்ளவும். இது இரண்டு வருடத்திற்கான (அல்லது அதற்கு குறைவான) தற்காலிக வேலைவாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP