10வது தேர்ச்சியா? அரசு வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 12

விருதுநகரில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
 | 

10வது தேர்ச்சியா? அரசு வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 12

விருதுநகரில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் விருதுநகரில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்  சிதம்பரம் பஞ்சாயத்து, மரவர் பெருங்குடி, அழகப்புரி, மறையூர், பிள்ளையார்குளம், கணபதி சுந்தர நாச்சியார்புரம், அச்சான்குளம், ரெட்டியார்பட்டி, தொம்பகுளம், கலையார்குறிச்சி, கிருஷ்ணபேரி, நடுவப்பட்டி, நிரைமதி, பெரிய பொட்டல்பட்டி, குருமூர்த்தி நாயக்கன்பட்டி, ரோசால்பட்டி, வச்சக்கரப்பட்டி, சத்திர புளியங்குளம், டி. கடமாங்குளம், தோப்பூர், கிழக்கு கரிசல்குளம், புதுக்கோட்டை, எடுக்காப்பட்டி, சின்ன ஓடைப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், முதல் தளம், ஆட்சியர் அலுவலகம், சாத்தூர்  சாலை, விருதுநகர் 626002 என்ற முகவரிக்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP