புதிய பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்ட்ர் விற்பனைக்கு அறிமுகம்..!

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி புதிய பிஎஸ்-6 என்டார்க் 125 ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யாத நிலையில், அந்நிறுவனத்தின் அலுவலக வலைதளப் பக்கத்தில் வாகனத்தின் விலை தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு ரூ. 65,975 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 | 

புதிய பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்ட்ர் விற்பனைக்கு அறிமுகம்..!

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி புதிய பிஎஸ்-6 என்டார்க் 125 ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யாத நிலையில், அந்நிறுவனத்தின் அலுவலக வலைதளப் பக்கத்தில் வாகனத்தின் விலை தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, இந்த புதிய டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு  ரூ. 65,975  (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்-4 வெர்ஷனில் இடம்பெற்றிருந்த அதே டிரம், டிஸ்க் மற்றும் ரேஸ் எடிசன் ஆகிய மூன்று வேரியன்டுகள் புதிய பிஎஸ்-6 மாடலிலும் தொடர்கிறது.

புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக என்டார்க் 125சிசி ஸ்கூட்டர் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் இருந்து வந்த கார்ப்புரேட்ட எஞ்சின் மாற்றப்பட்டு, ஃப்யூவெல் இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

                                                  புதிய பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்ட்ர் விற்பனைக்கு அறிமுகம்..!

எனினும், இந்த ஸ்கூட்டரின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாக எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவிலேயே இதுதொடர்பாக அறிவிப்புகளை டிவிஎஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்-4 ஸ்கூட்டரில் 124.9சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது 9.1 பிஎச்பி பவர் மற்றும் 10.5 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். தற்போது இந்த எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதால், ஸ்கூட்டரின் ஆற்றலில் மாறுபாடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP