1. Home
  2. வர்த்தகம்

டிவி-யை சுருட்டி வைத்துக்கொள்ளலாம்! எல்.ஜி-யின் ரோலிங் டிஸ்பிளே!

டிவி-யை சுருட்டி வைத்துக்கொள்ளலாம்! எல்.ஜி-யின் ரோலிங் டிஸ்பிளே!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெறும் தொழில்நுட்ப கண்காட்சியில், எல்.ஜி நிறுவனம், புதிதாக தனது அதிநவீன ரோலிங் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

லாஸ் வேகாஸ் நகரத்தில், வாடிக்கையாளர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. இதில், பல நிறுவனங்கள் தங்களது லேட்டஸ்ட் டெக்னலாஜியை உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் எல்.ஜி நிறுவனம் தனது அதிநவீன ரோலிங் டிஸ்பிளே டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாக வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வந்த மடங்கும் டிஸ்பிளே டெக்னலாஜி இப்போது தான், விற்பனைக்கு வந்துள்ளது. அல்டரா எச்டி தொழில்நுட்பம் கொண்ட தனது தொலைக்காட்சியின் டிஸ்பிளே, முழுவதும் மடங்கி ஒரு பெட்டிக்குள் சென்றுவிடுமாறு புதிய டிவியை உருவாகியுள்ளது எல்.ஜி. டிவியை கொண்டுள்ள அதே பெட்டியில் ஸ்பீக்கர்களை உள்ளதால், சவுண்ட் பாக்ஸாகவும் அது பயனளிக்கிறது. பல நாட்களாக இதுகுறித்து பேசப்பட்டு வந்த நிலையில், இறுதியாக விற்பனைக்கு இந்த டிவி வந்துள்ளது டெக் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like