1. Home
  2. வர்த்தகம்

வைஃபை மூலம் கால் செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல்


பிராட்பேண்ட் மற்றும் வைஃபை மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல் அளித்துள்ளது.

வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்ய இன்டர்நெட் டெலிபோனி (internet telephony app) செயலியை நடைமுறைக்கு கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிராய்யின் ஆலோசகர் அரவிந்த்குமார் கூறுகையில், ''மொபையில் சிக்னல் மோசமாக இருக்கும் இடங்களில் இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெற முடியும் வீட்டில் மற்றும் தூரப்பயணங்களின்போது வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் வசதி இருந்து, மொபைலில் சிக்னல் கிடைக்காமல் இருந்தால், செயலியை பயன்படுத்தி தொலைப்பேசி அழைப்புகளை செய்யலாம். பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சில மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம்'' என்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like